2020ஆம் ஆண்டை ’20’ என எழுதக்கூடாது: ஏன் தெரியுமா?
2020ஆம் ஆண்டு இன்னும் நான்கே நாட்களில் பிறக்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு குறித்த ஒரு முக்கிய விஷயத்தை பகிர்வோம்.
இதுவரை ஆண்டை எழுதும்போது சுருக்கமாக ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களை மட்டும் எழுதியிருப்போம். அதாவது 2019ஆம் ஆண்டை 19 என்று எழுதியிருப்போம். ஆனால் 2020ஆம் ஆண்டை 20 என சுருக்கமாக எழுதினால் அது 2000ஆம் ஆண்டு என தவறாக கணினி புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் 20க்கு பின்னர் யாராவது இரண்டு இலக்கங்களை சேர்த்து முறைகேடு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக 20 என சுருக்கமாக எழுதியபின் யாராவது ஒருவர் அதன்பின் 18 என்று சேர்த்துவிட்டால் அது 2018 என மாறிவிடும். எனவே 2020ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டின் முழு எண்ணை எழுதுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது