மீண்டும் துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்!

மீண்டும் துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்!
சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் இரண்டு மாதங்கள் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வந்தன
இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவாரின் ஒரு பிரிவு திடீரென ஆதரவு கொடுத்தால் பாஜக ஆட்சி அமைத்தது. பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத கட்சியிலிருந்து பிரிந்து வந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர் ஆனால் இந்த ஆட்சி ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை 
அதன் பின்னர் தற்போது சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கப்பட்டபோது மீண்டும் தேசியவாத கட்சியில் மீண்டும் இணைந்த அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply