ட்ரூ காலரால் கற்பை இழந்த 50 பெண்கள்: திடுக்கிடும் தகவல்
நம்முடைய மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வரும்போது அந்த அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ள ட்ரூ கால் என்ற செயலிய் பயன்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே
ஆனால் இந்த ட்ரூகாலர் மூலம் 50 பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது
சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ட்ரூ காலரில் குத்து மதிப்பாக பார்த்து 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் பெண்கள் பெயர் வந்தால் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டு காதல் வலையை வீசி உள்ளார்
அந்த வலையில் சிக்கும் பெண்களை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் 50 பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவியிடம் தொடர்பு கொண்டு போலீசில் சிக்கியுள்ளார். அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்