இன்று விடுமுறையா? இல்லையா? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்

இன்று விடுமுறையா? இல்லையா? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்

பொங்கல் விடுமுறை ஆக ஜனவரி 15 முதல் 17 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது

எனவே இன்றும் நாளையும் விடுமுறை என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் தற்போது வரை அந்த அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இன்றும் நாளையும் வேலை நாள் தான் என்ற அறிவிப்பும் வெளிவராததால், இன்று வேலை நாளா? விடுமுறை நாளா? என்ற குழப்பத்தில் செய்திகளை பார்த்துக்கொண்டே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இருப்பதாக கூறப்படுகிறதே

இருப்பினும் இன்று வேலை நாளாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை போகி பண்டிகைக்காகவது விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விடுமுறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போகி பண்டிகை,

Leave a Reply