கடைசி வரைக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லாத முக ஸ்டாலின்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மற்ற மதங்களின் பண்டிகையின்போது முதல் ஆளாக வாழ்த்து சொல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்து பண்டிகைகள் மட்டும் வித்தியாசமான முறையில் அவர் வாழ்த்து தெரிவிப்பார்
இந்த நிலையில் பொங்கல் திருவிழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சற்று முன்னர் தெரிவித்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துக்கள். * இயற்கையையும், பிற உயிரினங்களையும் காப்போம்; வள்ளுவமே நம் தமிழ்நெறி என முழங்குவோம்
இந்த வாழ்த்துச் செய்தியில் மறந்தும் கூட அவர் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறவில்லை. யாருமே ஏற்றுக் கொள்ளாத தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினம் என வாழ்த்துக்களை கூறியுள்ள அவர் உழவர் திருநாள், வள்ளுவர் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். மறந்தும்கூட பொங்கல் வாழ்த்து கூற வில்லை என்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.