ரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுக மட்டும் சற்று அமைதியாகவும் மென்மையாகவும் விமர்சனம் செய்து வருகிறது. முக ஸ்டாலின் அவர்கள் கூட இந்த விஷயத்தில் ’நண்பர் ரஜினிகாந்த்’ என்று மென்மையாகவே விமர்சனம் செய்தார். மேலும் உதயநிதி தவிர திமுகவின் மற்ற தலைவர்கள் ரஜினியை விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து இன்று பேட்டி அளித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:டைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. 1971ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் அதிமுக பயப்படாது’ என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.