ரஜினிக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு: ரசிகர்கள் கோரிக்கை
சமீபத்தில் துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ரஜினிகாந்த்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சிடி ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கமிஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது