ஜனவரி 31, பிப்ரவரி 1 இரண்டு நாட்கள் விடுமுறையா? பரபரப்பு தகவல்
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது இந்த வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் வேலைநிறுத்தம் நடைபெறும் இரண்டு நாட்களும் வங்கிகள் இயங்காது என கருதப்படுவதால் கிட்டத்தட்ட வங்கி விடுமுறை நாளாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர், சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டால் பேச்சு நடத்துவதாக, இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்தது. ஆனால், வேலை நிறுத்தத்திற்கு முன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண கூறினோம். ஆனால், இந்திய வங்கிகள் சங்கம், அது குறித்து எந்த கருத்தும்தெரிவிக்கவில்லை. எனவே, இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட, ஒன்பது சங்கங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.