7 ஓவரில் 3 விக்கெட்: இந்தியா திணறல் பேட்டிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது
இந்த நிலையில் இன்று நான்காவது டி20 போட்டியில் வெல்லிங்டன் நகரில் நடைபெற்று வரும் நிலையில் நியூஸிலாந்து கேப்டன் செளதி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 7 ஓவர்களில் 55 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் கேப்டன் விராத் 11 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் விளையாடி வருகிறார்.