2020ஆம் ஆண்டு பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ₹15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு
கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
உள்நாட்டு விமான போக்குவரத்தில் கிருஷி உதான் என புதிய திட்டம் தொடங்கப்படும்
திறன் இந்தியா திட்டத்திற்கு ரூ .3,000 கோடி ஒதுக்கீடு
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்
ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்
2000கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்
2023ம் ஆண்டுக்குள் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்
பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும்
சென்னை – பெங்களூரு இடையே எக்பிரஸ் நெடுஞ்சாலை
விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி
ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு
நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்
கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு