லாலு பதவி பறிப்பு எப்போது?

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டுள்ள ராஷ்டீரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் எம்.பி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட உள்ளது.
பீகார் மாநிலத்தில் லாலு 1990ம் ஆண்டு முதல்வராக இருந்த போது 37 கோடி மோசடி செய்ததாக அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த  வழக்கில் மொத்தம் மோசடி செய்த தொகை 950 கோடியாகும். ஆனால் அதற்கான ஆதாரங்களை மறைத்துவிட்டனர். ஆனால் 37 கோடிக்கான ரசீதுகள் மட்டுமே போலியாக தயார் செய்யப்பட்டு இருந்தன. இதனை வைத்து வழக்கு லாலுக்கு எதிராக மாற்றினர். மேலும் காங்கிரஸ் கட்சியினுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு வழக்கை இழுத்தடித்து வந்தார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் லாலு தண்டனை வாங்கி கொடுக்க சிபிஐ அதிகாரிகள் போராடினார். அவரின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. லாலு மீதான தண்டனை விவரம் 2 நாளில் அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பு பற்றி லாலுவிடம் கருத்துக்கேட்க முயன்ற போது அவர் மவுனமாக சென்று விட்டார். ஆனால் அவர் மகள் தேஜஸ்வி வழக்கு தொடர்பாக மேல் முறையயீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சிறையில் லாலுவுக்கு எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்பட மாட்டாது என்று ராஞ்சி சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply