மாநாடு படத்தின் கோவை படப்பிடிப்பு ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் கோவையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கோவையில் நடைபெறும் படப்பிடிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நாளில் அதே நேரத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
கோவையில் படப்பிடிப்பு ரத்து செய்வதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் படப்பிடிப்பு அன்றையதினம் திட்டமிட்டபடி தொடங்க உள்ளது என்பதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது