மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூடிவிடலாம்: ப.சிதம்பரத்திற்கு பிரணாப் மகள் பதிலடி

மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூடிவிடலாம்: ப.சிதம்பரத்திற்கு பிரணாப் மகள் பதிலடி

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியின் தோல்வியை கண்டு கொள்ளாமல் பாஜகவை தோல்வி அடைந்துவிட்டதை எண்ணி சந்தோச பட்டு வருகின்றனர் இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் இது குறித்து கருத்து தெரிவித்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கூறியதாவது:

பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பை நாம் ஆம் ஆத்மி கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டோமா?; அப்படியில்லை என்றால், நம்முடைய படுதோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதிலாக ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்?

Leave a Reply