ஒரு படத்தை எத்தனை தடவைதான் எடுப்பீங்க: ரசிகர்கள் புலம்பல்

ஒரு படத்தை எத்தனை தடவைதான் எடுப்பீங்க: ரசிகர்கள் புலம்பல்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’காடன்’ என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் இதுபோன்ற ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபத்தில் வெளிவந்தன என்று நெட்டிசன்கள் புலம்புகின்றனர்

ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படம் இதே போன்ற கதையம்சம் கொண்டது தான் என்றும் அதே போன்று ஜங்கிள் என்ற திரைப்படமும் இதே போன்ற காட்சிகளில் உள்ளது என்றும் ஒரு கதையை எத்தனை பேர் எத்தனை முறை தான் படம் எடுப்பீர்கள் என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்

மேலும் இந்த மூன்று படத்தின் போஸ்டர்களும் ஒரே மாதிரி இருப்பதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply