ஏரோப்ளேன் ஏறப்போகும் எருதுவிடும் இளைஞர்

ஏரோப்ளேன் ஏறப்போகும் எருதுவிடும் இளைஞர்

எருது விடும் போட்டியில் சீறிப்பாயும் எருதுகளுடன் சலைக்காமல் ஓடிய கிராமத்து இளைஞன், கர்நாடகாவின் சீனிவாஸ் என்பவருக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு அவர் தகுதி பெற்றால் அவரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்யும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\

உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய இந்த இளைஞருக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பயிற்சி கொடுத்தால் அவரது திறமை நிரூபிக்கப்பட அவர் விரைவில் ஏரோப்ளேன் ஏறி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விளையாட்டில் அரசியல் கலக்காமல் இதேபோல் இருக்கும் ஆயிரக்கணக்கானோர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால் இந்தியா தங்கங்களை குவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

Leave a Reply