குடியிருப்பு சட்டத்தால் பாதிப்பா? 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

குடியிருப்பு சட்டத்தால் பாதிப்பா? 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நிரூபித்தால் 10 லட்ச ரூபாய் சன்மானம் தர தயார் என இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு என கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியின் உதவியோடு போராட்டம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் என்பவர் ஒரு சவால் விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு என ஒரே ஒரு சிறந்த சரத்து இருந்தால் தான் பத்து லட்சம் ரூபாயை தர தயார் என்றும் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள யார் முன் வருவார்கள் என்பதை பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

https://twitter.com/Desame_Deivam/status/1229038030352072706

Leave a Reply