இந்தியன்-2 விபத்து: லைக்கா நிறுவனம் மீது வழக்கு
இந்தியன்2 படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறித்து இந்த படத்தின் இணை இயக்குனர் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகாரின் அடிப்படையில் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. கிரேன் உரிமையாளர் மற்றும் புரோடக்சன் மேலாளர் ஆகியோர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்தியன் 2\ படத்தின் படப்பிடிப்பின்போது மரணமடைந்த மூன்று பேர்களுக்கு ரூபாய் 2 கோடி அறிவித்ததோடு காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட லைகா நிறுவனம் மீது இந்த படத்தின் இணை இயக்குநர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது