மிதமான மழைக்கு வாய்ப்பு: விடுமுறை அளிக்கப்படுமா?
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை குறித்த செய்தி வெளியானவுடன் உடனே விடுமுறை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. விடுமுறை விடும் அளவிற்கு கனமழை தமிழகத்தில் இப்போதைக்கு பெய்ய வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது