கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தமிழகத்திற்கு மழை: நாளை விடுமுறை அளிக்கப்படுமா?

கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தமிழகத்திற்கு மழை: நாளை விடுமுறை அளிக்கப்படுமா?

கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை அதிகமாக இருந்தால் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் தமிழகத்தில் சில இடங்களில் அவ்வப்போது வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், கடலோர கர்நாடகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டதையொட்டி தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. நாகர்கோவில், பார்வதிபுரம், புத்தேரி உள்ளிட்ட இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. அதேசமயம் ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

Leave a Reply