சென்னை இளம்பெண்கள் கற்று கொடுத்த தொழில்: நெல்லை வாலிபர் கைது!
சென்னை இளம்பெண்கள் இருவர் கற்றுக்கொடுத்த தொழிலை நடத்திய நெல்லை வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் தொலைபேசி மூலம் ஆண்களுக்கு மிரட்டல் விடுத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை நெல்லை வாலிபர் ஒருவருக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். என்ஜினீயரிங் பட்டதாரியான அந்த வாலிபர் தொலைபேசியில் சாப்ட்வேர் மூலம் பெண் குரலில் பேசி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1000 ஆண்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னையை சேர்ந்த உதயராஜ் என்பவரிடம் அதேபோல் பெண் குரலில் பேசி மிரட்டியபோது போலீசாரிடம் அவர் பிடிபட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரது பெயர் ராஜ்குமார் ரீகன் என்றும், சொந்த ஊர் நெல்லை என்றும், மிரட்டல் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர கார் பங்களா உள்பட பல சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் ராஜ்குமார் ரீகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் திரட்டி வருகின்றனர். ஒரு ஆண், ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு சாபெட்வேர் மூலம் மிரட்டி பணம் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது