விமான விபத்தில் பிரபல விளையாட்டு வீரர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
விமான விபத்தில் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி, பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட், மற்றும் அவரது மகள் உள்பட 7 பேர் விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் மரணம் அடைந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் பிரையண்ட் உள்பட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்று கலிபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரையன்ட்டின் மனைவி கோப் பிரையன்ட், கண்ணீர் மல்க பேசியது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.