ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திய அரசு

ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திய அரசு

கோரோனா வைரஸ் அச்சத்தால் ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 3000 பேர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது
இந்த நிலையில்தான் ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக செய்து வந்தது

இதனை அடுத்து ஜப்பான் அரசுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஜப்பான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு நேற்று இரவு டெல்லிக்கு 119 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வந்து சேர்ந்தனர் அதுமட்டுமின்றி இலங்கை, நேபாளம், தென் ஆப்ரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர்களும் அதே விமானத்தில் இந்தியா வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பியதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply