முதல்வருடன் வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் திடீர் சந்திப்பு: பரபரப்பு தகவல்
சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் திடீரென போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நேற்றிரவு முதல்வரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் சில முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இதனை அடுத்து வண்ணாரப்பேட்டையில் அமைதி திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது