அஜித்துடன் இணையும் தனுஷ்-விஷால்

அஜித் பிறந்தநாளில் விஷால் படம்: பரபரப்பு தகவல்

விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் தற்போது பெரிதும் நம்பியிருப்பது ’சக்ரா’ படத்தை தான்

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளது

இந்த நிலையில் இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய விஷால் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ’சக்ரா’ படம் வெளியாக உள்ளது என்பதும், இதே நாளில் தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படமும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply