திமுகவின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கு ரஜினி: அதிர்ச்சியில் முக ஸ்டாலின்

திமுகவின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கு ரஜினி: அதிர்ச்சியில் முக ஸ்டாலின்

தமிழகத்தில் திமுகவின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் 100% திமுக கூட்டணிக்கு வந்தால் தான் அந்த கூட்டணியில் 38 தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற முடிந்தது

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியல் வரவுள்ள நிலையில் முதல் கட்டமாக திமுகவின் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில்தான் சிஏஏ சட்டம் குறித்து இஸ்லாமிய மதகுருமார்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

சிஏஏ சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திருப்தி செய்து விட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்பது ரஜினி தரப்பின் ஐடியாவாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இஸ்லாமிய மதகுருமார்கள் இன்று அல்லது நாளை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசனை பெற உள்ளனர் இந்த ஆலோசனையின்போது இஸ்லாமிய குருமார்கள் கூறும் சில கருத்துக்களை ரஜினிகாந்தை ஏற்றுக் கொள்வார் என்றும் அதே போல் ரஜினிகாந்த் கருத்துக்களை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ரஜினியின் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply