திடீரென கைகால் செயலிழந்த டிவி பிரபலம்: அதிர்ச்சி தகவல்
ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்த லோகேஷ் என்பவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குரைவு காரணமாக அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கலக்கப்போவது யாரு புகழ் பிரபல தொகுப்பாளர் திருச்சி சரவணகுமார் தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக உறுதி செய்துள்ளார்.
தற்போது லோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது சிகிச்சைக்கு சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் முடிந்த உதவியை பொதுமக்கள் செய்யுமாறும் சரவணகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தில் லோகேஷ் காமெடி வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் இன்னும் ஒருசில படங்களில் அவர் நடிக்கவிருந்த நிலையில் இப்படி ஒரு துரதிஷ்ட நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது