திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி தகவல்

திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி தகவல்

திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் எம்எல்ஏக்கள் கேபிபி சாமி மற்றும் காத்தவராயன் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் சமீபத்தில் காலமானார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது

இதனை அடுத்து திருவெற்றியூர் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுதேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேல் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அதிவிரைவில் அதாவது ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின்படி விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply