திரைத்துறைக்கு திடீரென ஏற்பட்ட ரூபாய் 500 கோடி நஷ்டம்: காரணம் என்ன?
உலகம் முழுவதும் லாபம் தரும் துறைகளில் ஒன்றாக இருந்து வரும் திரைத்துறைக்கு திடீரென 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனா தென்கொரியா இத்தாலி உள்பட பல நாடுகளில் திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டது. அதேபோல் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளதால் திரைத் துறையினருக்கு ரூபாய் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
திரையுலகில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் வைரஸ் தாக்கம் குறைந்தால் மட்டுமே மீண்டும் திரைத்துறையை மீண்டும் வரும் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் இந்தியாவில் திரைத்துறைக்கு கொரோனா வைரஸ் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது