இன்றைய ராசிபலன்கள் 05.03.2020

இன்றைய ராசிபலன்கள் 05.03.2020

மேஷம்:
இன்று அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய
வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

ரிஷபம்:
இன்று கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மிதுனம்:
இன்று புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கடகம்:
இன்று உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:
இன்று வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில்கூட அனுகூலமான பலனை அடையமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்-உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

துலாம்:
இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம்:
இன்று தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும் சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியானநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

தனுசு:
இன்று உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள்.
அதிர்ஷ்டநிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:
இன்று உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். பெயர், புகழ் உயரும்.
அதிர்ஷ்டநிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மீனம்:
இன்று எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மக்களின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் அமையும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Leave a Reply