நாளை திருமணம், இன்று மாப்பிள்ளை கொலை: பரபரப்பு தகவல்

நாளை திருமணம், இன்று மாப்பிள்ளை கொலை: பரபரப்பு தகவல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த வாலிபர் ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஜேசிபி ஆப்பரேட்டர் முனீஸ்வரன் என்பவருக்கு நாளை திருமணம் நடக்கவிருந்தது. இந்த திருமணத்திற்கான அனைத்து பணிகளையும் இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென முனீஸ்வரன் கழுத்தறுபட்டு அவரது அறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டு அனைவரும் அதிர்ந்தனர்

near உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்கவிருந்த வாலிபர் முனீஸ்வரன் யாரால் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

Leave a Reply