என்னுடைய மதிப்பெண்ணை என் நண்பருக்கு கொடுங்கள்: விடைத்தாளில் மாணவனின் வித்தியாசமான வேண்டுகோள்

என்னுடைய மதிப்பெண்ணை என் நண்பருக்கு கொடுங்கள்: விடைத்தாளில் மாணவனின் வித்தியாசமான வேண்டுகோள்

மாணவர் ஒருவர் தனது விடைத்தாளில் தனக்கு வரவேண்டிய போனஸ் மதிப்பெண்களை தனது நண்பர்கள் யாராவது ஒருவருக்கு கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஒருவர் தனது விடைத்தாளில் அதிக மதிப்பெண்களை பெற்று இருந்தார். அவர் 94 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவருக்கு போனஸ் மதிப்பெண் ஐந்து மதிப்பெண் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் தனது விடைத்தாளில் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்

அதில் எனக்கு போதுமான மதிப்பெண் கிடைத்துவிடும் என்பதால் போனஸ் மதிப்பெண் எனக்கு தேவை இல்லை. அந்த போனஸ் மதிப்பெண்ணை தேர்வில் பாஸ் ஆக முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் யாராவது ஒரு மாணவருக்கு கொடுத்து, அந்த நண்பரை பாஸ் ஆக்கி விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த வேண்டுகோளை விடைத்தாள் திருத்திய ஆசிரியர் பார்த்து அசந்துபோய் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் இந்த சமூக வலைதள பதிவு மில்லியன் கணக்கான லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply