முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்

முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகாரில் முதல்வர் வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக பிரிட்டனைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் இதுகுறித்து இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரம் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிகார் மாநிலத்தின் முன்னாள் எம்எல்சி ஆக இருந்த வினோத் சவுதரி என்பவரின் மகள் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். புஷ்பம் பிரியா சவுத்ரி என்ற இவர் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

இவர் தனியாக ஒரு தனி அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் பீகாரின் அனைத்து தொகுதியிலும் போட்டியிடப் போவதாகவும் தானே முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பீகாரில் பல கட்சிகள் இருந்துவரும் நிலையில் தற்போது புதிய கட்சி ஒன்று உருவாகி இருக்கிறது என்பதும் அதில் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply