திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? ஐவருக்குள் கடும் போட்டி

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? ஐவருக்குள் கடும் போட்டி

கடந்த 42 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் அவர்கள் கடந்த சனிக்கிழமை காலமானதை அடுத்து அந்தப் பதவிக்கு அடுத்து யார் வருவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

அதிமுக போன்று திமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பெரிய மதிப்பில்லை என்றாலும் அந்த பதவி திமுக தலைவருக்கு அடுத்தபடியான பதவி என்பதால் அந்த பதவியை பிடிக்க திமுக பிரமுகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்

குறிப்பாக அன்பழகன் இருந்த பதவியை பிடிக்க திமுக பொருளாளர் ஆக இருக்கும் துரைமுருகன் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போது திமுக நாடாளுமன்ற தலைவராக இருக்கும் டிஆர் பாலு அவர்களும் அந்த பதவியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் சமீபகாலமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலு அவர்களும் இந்த பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது அதுமட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்புடன் அரசியல் நடத்தி வந்த கேஎன் நேரு தான் ஒரு சீனியர் என்பதால் இந்த பதவிக்கு தகுதியானவர் என்று என் முக ஸ்டாலின் தரப்பிடம் முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது

மேலும் ஆ.ராசா மற்றும் பொன்முடியும் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்துள்ளதாகவும் திமுக தலைவரின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களில் யார் அடுத்த திமுக பொதுச்செயலாளர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply