மாஸ்டரை அடுத்து சூரரை போற்றுக்கும் சிக்கல்!
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மார்ச் 27 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டி ராஜேந்தர் அவர்கள் அறிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு மாஸ்டர் படத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே அறிவிக்கப்பட்டு உள்ளதாக வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் மாஸ்டரை அடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருந்த சூரரைப்போற்று படத்திற்கும் இதே பிரச்சனை காரணமாக சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்கள் வரவிருக்கும் நிலையில் விநியோகஸ்தர் சங்கம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திரையரங்குகள் மூடப்பட்டால் மாஸ்டர், சூரரைப்போற்று உள்பட முக்கிய திரைப்படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.