கொரோனாவால் இந்தியாவில் பலியான இரண்டாவது நபர் யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவியது என்பது தெரிந்ததே. இந்தியாவில் சுமார் 80 பேர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பெங்களூரை சேர்ந்த 76 வயது முகமது சித்திக் என்பவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்த அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் அதனை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் நபர் என்ற செய்தி நாடு முழுவதும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது \
இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணத்தால் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் மேலும் இந்தியாவில் இனிமேலும் எந்த உயிரிழப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.