கவனமின்றி இருந்தால் லட்சக்கணக்கில் உயிர் சேதம் ஆகும்: அதிர்ச்சி எச்சரிக்கை

கவனமின்றி இருந்தால் லட்சக்கணக்கில் உயிர் சேதம் ஆகும்: அதிர்ச்சி எச்சரிக்கை

கொரொனா குறித்த அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் இன்னும் லட்சக்கணக்கில் மனித உயிர்களை இழக்க கூடிய நிலை உண்டாகும் என ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது

சீனா உள்பட உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டுவித்து வரும் கொரொனா வைரஸ் தற்போது சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலிய மக்களை கொன்று குவித்து வருகிறது

இந்த நிலையில் கொரொனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கொரொனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் ஈரான் அரசு எச்சரிக்கை

குறிப்பாக பொது இடங்களில் கூட வேண்டாம், கூட்டு வழிபாடு வேண்டாம் ஆகிய அறிவுறுத்தல்களை ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஈரானில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் போராட்டங்களை நடத்தி வந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என்பதும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த முறைகளைக் கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் லட்சக்கணக்கில் பலியாக நேரிடும் என ஈரான் அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply