மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கக்கூடாது: ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள்

மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கக்கூடாது: ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மீதி காரணமாக பொதுமக்கள் ஹோட்டலுக்கு வருவதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர். மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் மட்டும் தற்போது ஓட்டலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஓட்டல்களில் 50 சதவீதம் விற்பனை குறைந்து விட்டதாகவும் இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி, வருமான வரி, தொழில் வரி ஆகியவற்றுக்கு மூன்று மாதங்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

சிங்கப்பூர் உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக எந்தவித வரியும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply