கலிபோர்னியா வரலாற்றில் நடக்காத ஒன்று: கொரோனா எதிரொலி
கொரோனா எதிரொலியாக உலகெங்கும் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர் என்பதும், கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனா தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் தற்போது ஒரே வழி என்று அனைத்து நாடுகளின் அரசுகளும் அறிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகின் மிக பிஸியான நகரங்களில் ஒன்று கலிபோனியா. இந்த நகரில் 24 மணி நேரமும் சாலைகளில் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக 40 மில்லியன் கலிபோர்னியா மக்கள் கடந்த 24 மணி நேரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர் காரணம் கொரோனா
கலிபோர்னியா மாகாணத்தில் ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 20 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளி வந்த தகவலை அடுத்து அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் வீட்டிலேயே உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு கலிபோனியா மக்கள் வெளியே வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது