இத்தாலி நாடே அழிகிறதா? அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கூட அங்கு கொரோனா தற்போது அடங்கிய நிலையில் இத்தாலியில் படுமோசமாக நாளுக்கு நாள் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 791 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் சுமார் 12 ஆயிரம் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் மட்டுமெ உயிரிழந்தவர்களின் சதவீதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கொரோனா வைரசால் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 6500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி தகவல் வெளிவந்துள்ளது. இத்தாலி அரசு உடனடியாக கொரோனாவை கட்டுப்படுத்தாமல், இதே ரீதியில் மரண எண்ணிக்கை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் இத்தாலியே கிட்டத்தட்ட அழிந்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்