மார்ச் 31ம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை: முதல்வர் அறிவிப்பு
டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தனியார் நிறுவன உரிமையாளர்களிடையே பெரும் பரபரப்பும், தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது
டெல்லியில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.