கேள்விக்குறியான அரசின் அறிவிப்பு: கோயம்பேடில் குவிந்த பொதுமக்கள்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது
இதனையடுத்து நேற்று இரவு முதல் ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸை தவிர்க்க கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும் என்பது தான் ஒரே வழி என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளதால் அரசின் அறிவிப்பு கேள்விக்குறியாகியுள்ளது
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அனைவரும் மறந்து விட்டு தீபாவளி, பொங்கல் கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்வது போல் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே கோயம்பேடில் குவிந்தது தான் இதற்கு காரணம்
இதில் எத்தனை பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ? அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று எத்தனை பேர்களுக்கு கொரோனாவை பரப்புவார்களோ என்ற அச்சம்தான் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது