கொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்த ஓபிஎஸ் மகன்
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களைப் பாதித்து வரும் நிலையில் அந்த வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன
இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் இருந்து நிதி உதவியும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக தேனி எம்பியும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் குமார் அவர்கள் ரூபாய் ஒரு கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மற்ற எம்பிக்களும் தாராளமாக கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது