மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட குடிமகன்: அதிர்ச்சி தகவல்

மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட குடிமகன்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய தேவை உள்ள பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியா முழுவதும் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். ஒரு சிலர் மதுபான கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையான ஒருவர் மதுபானம் கிடைக்காததால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. 38 வயதான அந்த நபர் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து குடித்து வந்ததாகவும் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானம் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply