ஆயிரத்தை நெருங்குகிறது இந்தியா: என்ன செய்ய போகிறார்கள் அரசும் மக்களும்?

ஆயிரத்தை நெருங்குகிறது இந்தியா: என்ன செய்ய போகிறார்கள் அரசும் மக்களும்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனாவினால் முதலில் ஓரிருவர் மட்டும் தாக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவினால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் ஆயிரத்தை தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதிலும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சிறிதும் குறையாமல், மாறாக அதிகரித்துக்கொண்டே போவது இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

இதன் மூலம் இந்திய மக்கள் 100% ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றவில்லை என்றே தெரிகிறது. 99 சதவீதம் சரியாக பின்பற்றி 1% மக்கள் பின்பற்றவில்லை என்றாலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே இருக்கும் என்பதால் அனைவரும் இதனை உணர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply