நீங்கள் தான் என் கடவுள்: ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு கமல் வாழ்த்து
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாண்டித்துரை அவர்கள் சென்னையில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து போன் செய்து இந்த வேலையே வேண்டாம், உடனடியாக ஊருக்கு வந்துவிடு நான் பிச்சை எடுத்தாவது உனக்கு நான் சாப்பாடு போடுகிறேன் என்று கூறிகிறார்
ஆனால் அதற்கு பாண்டித்துரை இதே போல் நாம் எல்லோரும் வந்து விட்டால் ஆம்புலன்ஸ் வண்டியை யார் ஓட்டுவது? நோயாளிகளை காப்பாற்றுவது யார்? எனக்கு பிடித்த வேலை இது. எனவே என்னால் வர முடியாது என்று கூறியுள்ளார்
பாண்டித்துரையின் தாயாரும் இதையே கூறியபோதும் அவருக்கும் ஆறுதல் கூறி எனக்கு ஒன்றும் நேராது நான் நன்றாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார். இந்த உருக்கமான உரையாடல் குறித்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கூறியிருப்பதாவது: 108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள்.பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்?என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கட உள்
108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள்.பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்?என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கட உள்
— Kamal Haasan (@ikamalhaasan) March 28, 2020