அறிவே இல்லாத பொதுமக்கள்: சிக்கன் மட்டன் கடைகளில் குவிந்த கூட்டம்

அறிவே இல்லாத பொதுமக்கள்: சிக்கன் மட்டன் கடைகளில் குவிந்த கூட்டம்

கொரோனா வைரஸுக்கு உலகமே சிக்கி தவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதற்காக அந்த கடைகளின் முன் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

144 தடை முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது போல் அனைவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சிக்கன் மட்டன் மீன்களை வாங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர் வழக்கமாக வரும் ஞாயிறு போல் எண்ணிக் கொண்டு அனைவரும் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

இது போன்று மக்கள் பொறுப்பில்லாமல் பொதுமக்கள் நடந்து கொண்டால் இந்தியாவை கொரானாவில் இருந்து ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply