சென்னை மக்கள் மட்டும் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டுமா? அதிர்ச்சி தகவல்

சென்னை மக்கள் மட்டும் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டுமா? அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை சீரியசாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் திடுக்கிடும் திருப்பமாக தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. சென்னையிலுள்ள அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், கோட்டூர்புரம், ஆலந்தூர் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

ஆனால் இதுகுறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்தபோது கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படுபவர்களும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிவந்தவர்கள் மட்டும் வீட்டுக்குள் இருக்கும்போது மாஸ்க் அணிந்து கொள்ளலாம் என்றும் மற்றவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply