டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1500 பேர்களுக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தமிழகத்திலிருந்து ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் அவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு டில்லிக்கு சென்று திரும்பிய தமிழகத்தை 1500 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? அவர்களின் மூலம் தமிழகத்தில் காட்டு தீ போல் பரவுமா? அவர்களில் 17 பேரில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் அதிகம். இதில் 819 பேரின் விவரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மற்றவர்கள் முன்வந்து ஒத்துழைப்பதன் மூலம் மட்டுமே தொற்றை கட்டுப்படுத்த முடியும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
வழக்கம் போல் இந்த பதிவையும் மதரீதியான பதிவு என விமர்சிப்பவர்கள் குறித்து கவலையில்லை. ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சமுதாய நலனுக்காக, இஸ்லாமிய சமுதாயத்தினர் அரசோடு ஒத்துழைப்பதன் மூலமே பேராபத்தை நெருங்க விடாமல் செய்ய முடியும் என்பதை உணரவேண்டும்.
இடது சாரிகளும்,ஓட்டுக்காக போலி மதசார்பின்மை பேசும் இதர கட்சிகளும் பொறுப்போடு நடந்து கொண்டு அந்த சமுதாயத்தினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நடுநிலையாக பேசுகிறேன் என்று கூறிக்கொண்டு ‘மூத்த பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் முற்போக்கு கருத்துகளை சொல்வதாக எண்ணிக்கொண்டு மதரீதியாக சிறுபான்மையினரை தூண்டிவிடும் திரியும் சிலர் எந்த கருத்தையும் முன் வைக்காமல் வாய் திறக்காமல் இருந்தாலே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை காப்பாற்ற இயலும்
தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு டில்லிக்கு சென்று திரும்பிய தமிழகத்தை 1500 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? அவர்களின் மூலம் தமிழகத்தில் காட்டு தீ போல் பரவுமா?
அவர்களில் 17 பேரில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் அதிகம்.(1/5)
— Narayanan Thirupathy (@narayanantbjp) March 30, 2020