கொரோனாவால் சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கொலை: திடுக்கிடும் தகவல்
கொரோனாவால் சொந்த ஊருக்கு வந்த வாலிபர் ஒருவர் கொலை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் சர்மிளா என்ற பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டார்
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்த சர்மிளாவின் தந்தை இருவரையும் பஞ்சாயத்து செய்து பிரித்து விட்டதாக தெரிகிறது
இதனையடுத்து சென்னை சென்ற சுதாகர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலை இல்லாத காரணத்தால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்
அப்போது அவர் மீண்டும் ஷர்மிளாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக தெரிகிறது இதனை அடுத்து சர்மிளாவின் தந்தையும் அவருடைய உறவினர் ஒருவரும் சேர்ந்து சுதாகரை ஏரிக்கரையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது