கொரோனாவில் இருந்து மீண்ட 93 வயது கணவரும், 88 வயது மனைவியும்: கேரளாவில் ஆச்சரியம்

கொரோனாவில் இருந்து மீண்ட 93 வயது கணவரும், 88 வயது மனைவியும்: கேரளாவில் ஆச்சரியம்

இந்தியாவில்தான் மிக அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருப்பதை கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து ஒரு சந்தோசமான செய்தி வந்துள்ளது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 93 வயது கணவர் ஒருவரும் அவருடைய 88 வயது மனைவியும் கொரோனா வைரசால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஆச்சரியம் தரும் வகையில் இருவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் கண்டன

தற்போது அவர்களுக்கு மீண்டும் ரத்தப்பரிசோதனை எடுத்ததில் இருவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
பொதுவாக வயதானவர்களுக்கு கொரோனா மிகவும் பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 93 வயது கணவர், 88 வயது மனைவியும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply